Breaking News

ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறார் யுவராஜ் சிங்..

       இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலித்த கொண்டிருந்தவர் யுவராஜ் சிங். 2007 20-20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களை இந்தியா வென்று உலக சாம்பியன் பெற்றதற்கு மிக முக்கிய காரணியாக இருந்தவர் யுவராஜ் சிங். மேலும் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து உலக சாதனை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
     கடந்த ஆண்டு ஜூன் மாதம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் பத்து ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.

       இந்நிலையில் யுவராஜ் சிங், பஞ்சாப் அணி இளம் வீரர்கள் உடன் பயிற்சியில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் சிங் விளையாட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவார் என்று செய்திகள் வெளியாகின. 

          இந்நிலையில் இதுபற்றி யுவராஜ் சிங், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் புனித் பாலி என்னிடம் ஓய்வு முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். தொடக்கத்தில் ஓய்வு முடிவை திரும்பப் பெறுவது பற்றி நான் யோசிக்கவில்லை. 

        ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு பயிற்சி ஆட்டத்தில் போதுமான அளவிற்கு சிறப்பாக விளையாடினேன். பிசிசிஐ அனுமதி கொடுக்கும் பட்சத்தில் உலகளவில் உள்ள லீக் போட்டிகளில் விளையாட விருப்பம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

      நானும் ஹர்பஜன் சிங்கும் இதுவரை பஞ்சாப் அணிக்காக எதுவும் செய்யவில்லை. அதனால் என்னுடைய இறுதி முடிவு முக்கிய காரணியாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments