Breaking News

செப்-07 முதல் ரயில் போக்குவரத்து...! நாளை முதல் ரயில்வே முன்பதிவு துவக்கம்.

       பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ரயில்வே போக்குவரத்து வரும் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதற்காக ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஏழு சிறப்பு ரயில்களோடு கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் சேர்த்து 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
      இந்நிலையில் ரயில் பெட்டிகளில் கிருமிநாசினி தெளித்தல், டிக்கெட் கவுண்டர்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

     இதைத்தொடர்ந்து நாளை முதல் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலில்வே நிலையத்திற்கு வரும் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் டிக்கெட் உறுதியானவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  ரயிலில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கப்படாது எனவும், தேவையான அளவிற்கு மட்டுமே குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments