Breaking News

காவலர்கள் மகிழ்ச்சி... பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல்துறை ஆணையர் உத்தரவு...

       சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சென்னையில் பணிபுரியும் காவலர்களுக்கு பிறந்தநாள் அன்று விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
      கொரொனொ தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, அனைத்து துறையினரும் வீட்டில் அமர்ந்து இருந்த நிலையிலும் கூட காவல்துறை, தனது பணியை தொய்வில்லாமல் செய்து வந்தது.

    பணிச்சுமை, மன உளைச்சல் காரணமாக சில காவலர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது. மேலும் ஒரு சில இடங்களில் காவலர்கள் பணிச்சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் நடந்துவந்தன.

     இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு மகேஷ் குமார் அகர்வால், இன்று முதல் சென்னையில் பணிபுரியும் காவலர்களுக்கு பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் சக பணியாளர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    தொடர் பணிச்சுமை, மன உளைச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கு இந்த நடவடிக்கை இன்ப அதிர்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

Post a Comment

0 Comments