Breaking News

சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும்..! தமிழக அரசு அதிரடி.


    தமிழகத்தில் பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மூடப்பட்ட அரசு அலுவலகங்கள் மே மூன்றாவது வாரம் முதல் 50% பணியாளர்களுடன் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வந்தது. ஐம்பது சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் வாரத்தில் நான்கு நாட்களில் வேலை இருப்பது போல சுழற்சி பணிப் பட்டியல் நடைமுறையில் இருந்தது.
     இக்காரணத்தினால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் சனிக்கிழமை அலுவலகங்கள் இருக்காது என்று அறிவிக்கப்படும் என்று அனைத்து அரசு அலுவலர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 

            ஆனால் வரும் டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து சனிக்கிழமை அலுவலகம் நூறு சதவீத பணியாளர்கள் இயக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் கிருமி நாசினி தெளிப்பு பணிக்காக, மாதம் இரண்டாம் சனி மட்டும் விடுமுறை அளிக்கப்பட இருக்கலாம் என்றும் தெரிகின்றது.தற்போது கிடப்பில் உள்ள அலுவலக பணிகளை முடிப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

     வாய்மொழியாக அறிவிக்கப்பட்ட இந்த நடைமுறைக்கு பல்வேறு அமைப்பினர் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். ஆதலால் இதுகுறித்த முடிவுகளை அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments