Breaking News

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் முழு அளவில் பேருந்து, ரயில் இயக்கப்படும்...! தமிழக அரசு முடிவு.

         தமிழகத்தில் தற்போது மாவட்டங்களுக்குள் பேருந்து இயங்க அனுமதித்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் முழு அளவில் பேருந்துகளை ரயில்களையும் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
        கொரொனொ பரவல் காரணமாக மார்ச் 23 தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் நலனுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வந்தது.

        மேலும் பொதுமக்கள் பலர், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்காக எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும், பேருந்துகள் இயக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன.

       இந்நிலையில் தமிழக அரசு பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அனைத்து பேருந்துகள் மற்றும் ரயில்களை, நெறி காட்டு வழி முறைகளை பின்பற்றி இயக்க முடிவு செய்துள்ளது .

    இதுகுறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, "தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும் தனிமனித இடைவெளி, முக கவசம், சோப்பின்னால் கைகளைக் கழுவுதல் ஆகிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றினால் மட்டுமே கொரொனொ நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments