Breaking News

பள்ளி பாடத் திட்ட அளவு குறைக்கப்படுமா... நிபுணர் குழு பரிந்துரை.

     இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஜூன் மாதம் திறக்கும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாம் என்று அறிவித்தது.



     முதல்கட்டமாக சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தவும், பாடத்திட்டத்தை போதுமான அளவு குறைத்துக்கொள்ளவும் பரிந்துரை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும், அரசுப்பள்ளிகளில் வாட்ஸ்அப், யூடியூப், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.

      இந்நிலையில் தமிழக அரசு, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பாதிப்புகளை ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

     இந்த குழுவின் முதல் கட்ட பரிந்துரை அறிக்கை ஆனது முதல்வர் பழனிசாமி இடம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இதன் அடுத்தகட்ட அறிக்கை தற்பொழுது சமர்ப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இந்த அறிக்கையில் பாடத்தை நடத்துவதற்கு போதிய கால அளவு இல்லாததால், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 30% பாடத்திட்டத்தினை குறைக்கவும், மற்ற வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டத்தை குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments