Breaking News

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் கிடையாது... தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் அதிரடி.

      கொரொனொ தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகின்றது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி தங்களது பங்களிப்பினை அளித்து வருகின்றன. மேலும் அரசு மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி மூலம் பல்வேறு கல்வி செயல்பாட்டு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.

    இந்நிலையில் மாணவர்களுள் பலர் செல்போன் வசதி, இணையதள வசதி இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

      மேலும் ஒரு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் தங்களது குழந்தைகளை ஈடுபடுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தி வருகின்றன . சமீபத்தில் தேனியை சேர்ந்த விக்ரபாண்டி என்ற மாணவன் ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் கிடையாது எனவும், அவர்களை கட்டாயப்படுத்தி வகுப்புகளில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் தமிழக பள்ளிக்கல்வித் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments