Breaking News

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை குளத்திற்குள் கட்டுவதா...? பூங்கோதை ஆலடி அருணா குற்றச்சாட்டு.

      தென்காசி ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணி தொடங்க இருக்கும் நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, ஆயிரப்பேரி பகுதியில்ஆட்சியர் அலுவலகம் குளத்திற்குள் கட்டப்படுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
      தென்காசி, கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் இல்லாத நிலையில் ஆயிரப்பேரி அருகே புதிதாக 28 ஏக்கர் நிலப்பரப்பில் 119 கோடி நிதியில் கட்டப் படுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிரபேரி பகுதியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.

   இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆயிரப்பேரி பகுதியில் கண்டுகொண்டான் மாணிக்கம், பெரியகுளம் என்ற இரண்டு முக்கிய குளங்களுக்கு வரக்கூடிய நீர்வரத்தினை தடை செய்யும் அளவில் கட்டிடங்கள் கட்டப்படும் பொழுது பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான சரியான இடத்தினை தேர்வு செய்யுமாறும், தென்காசி நகரத்திலேயே கிட்டத்தட்ட 10 இடங்கள் போதுமான வகையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் .

       மேலும் இந்த விவகாரத்தில் சட்டரீதியாக களத்தில் தங்களது போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளார்.


Post a Comment

0 Comments