Breaking News

நகசுத்தி ஏற்பட்டு விட்டதா..? இனி கவலை வேண்டாம்.. நக சுத்தியை குணப்படுத்தும் எளிமையான வழிமுறைகள்.

          நம்மில் பலர் நக சுத்தியால் பாதிக்கப்பட்டிருப்போம். அதனால் ஏற்படும் வலி கொடூரமானது. நக இடுக்குகளில் அழுக்குகள் நோய்க்கிருமிகள் அடைந்துகொண்டு பிரச்சினையை ஏற்படுத்தி நகசுத்தியினை ஏற்படுத்தி விடுகின்றன. அதை தாங்கிக்கொள்ள முடியாமல் நாம் மருத்துவரை அணுகி இருப்போம். ஆனால் மருத்துவமனைக்கு செல்லாமல் நகசுத்தியை குணப்படுத்தும் எளிய வழிமுறைகள் பல உள்ளன.
நக சுத்தியை குணப்படுத்தும் எளிமையான வழிமுறைகள்

#வினிகரை நீரில் கலந்து, அந்த நீரில் பாதிக்கப்பட்ட விரலை  20 நிமிடம் ஊறவைத்தால் பாதிப்பு குறைந்து குணமடையும்.


#உப்பு கரைசலில், சிறிது நேரம் நகசுத்தி ஏற்பட்ட விரலினை வைத்தால் எளிதில் நகசுத்தி குணமடையும்.


#மஞ்சளினை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர பாதிப்பு குறையும்.


#வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட விரலில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


#கற்றாலை சாறுடன் மஞ்சள் கலந்து பாதிக்கப்பட்ட விரலில் தடவினால் பாதிப்பு குணமடையும்.


#எலுமிச்சை பழத்தை பிழிந்து  நோய் பாதிக்கப்பட்ட பகுதியில் விட்டால் பாதிப்பு குணமடையும்.


   மேற்கண்ட வழிமுறைகளில் ஏதாவது ஒன்றினை பின்பற்றினாலே போதும் எளிமையாக நகசுத்தியை குணமாக்கிக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments