Breaking News

சுளுக்கு பிடித்துவிட்டதா..? இனி கவலை வேண்டாம்..! இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.

      நமக்கு சில நேரங்களில் கால்களில் அல்லது கைகளில் அல்லது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு நம்மை பாடாய் படுத்திவிடும். வலியும் வீக்கமும் சேர்ந்து வேதனைப் படுத்தி விடும்.  அடிபட்ட இடத்தில் ரத்தம் கட்டாக உறைந்து நிற்பதே சுளுக்கு எனப்படுகிறது.
      நமது முன்னோர்கள், இந்த சுளுக்கை  குணப்படுத்துவதற்காக பல்வேறு வைத்திய முறைகளை கண்டறிந்து வைத்துள்ளார்கள். அதனை பின்பற்றினாலே நாம் எளிதாக சுளுக்குக்கு குட்பை சொல்லிவிடலாம்.

சுளுக்கை  குணப்படுத்தும்  வைத்திய முறைகள்

#புளியைக் கரைத்து கொதிக்க வைத்து, அதனுடன் உப்பு மஞ்சள் சேர்த்து  சுளுக்கு ஏற்பட்ட இடத்தில், மிதமான சூட்டோடு தேய்த்தால் சுளுக்கு குணமாகிவிடும்.


#பிரண்டை தண்டினை நறுக்கி, அதன் உள்ளே மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் சுளுக்கு ஏற்பட்ட  இடத்தில் தேய்க்கலாம்.


#முருங்கைப் பட்டை, சுக்கு ஆகியவற்றை இடித்து, அதனுடன் கற்பூரம் சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் போல  சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தேய்த்துவிட்டால், சுளுக்கு குணமாகிவிடும்.


#பூண்டினை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்றுப்போட்டால் சுளுக்கு குணமாகிவிடும்.


#தரமான ஆமணக்கு எண்ணெய் வீக்கம் உள்ள இடத்தில் தேய்த்தால் சுளுக்கு குணமாகும்.


#ஜாதிக்காயினை உடைத்து, அதோடு பால் சேர்த்து அரைத்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் சுளுக்கு சரியாகும்.


Post a Comment

0 Comments