Breaking News

மீண்டு வருகிறார் எஸ்.பி.பி.... பரிசோதனையில் கொரொனொ நெகட்டிவ்..

             பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், கடந்த மாதம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரொனொ தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி போனது. 

          அவரது நுரையீரலில் தொற்று தீவிரம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
     இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் எஸ்பிபிகாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேட்டியளித்த எஸ்.பி.பி சரண், வரும் திங்கள்கிழமை நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.

    அவர் எதிர்பார்த்ததை போலவே, எஸ்.பி.பியின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. தற்போது எடுக்கப்பட்ட கொரொனொ பரிசோதனையில் எஸ்.பி.பிக்கு நெகட்டிவ் காண்பித்துள்ளதாகவும், அதனால் வெண்டிலேட்டர் ஐ தற்போது பயன்படுத்த அவசியம் இல்லாததால் அதை நீக்கி விட்டதாகவும், எஸ்.பி.பி யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

     ஆனால் நுரையீரல் தொற்று முழுமையாக குணமடையும் வரை அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க படுவார் என்றும் அறிவித்தது.


Post a Comment

0 Comments