Breaking News

பிரபல சீரியல் நடிகை தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...

     பிரபல தெலுங்கு சீரியல் நடிகை ஸ்ரவானி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      தெலுங்கில் மனசு மமதா, மௌன ராகம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி .
     இவர் நேற்று ஹைதராபாத் மதுராவில் உள்ள தனது வீட்டு கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்ரவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

      டிக்டாக் மூலமாக அறிமுகமான தேவராஜ் என்பவர் தனது சகோதரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை முடிவு எடுத்திருப்பதாகவும் ஸ்ரவானியின் அண்ணன் பேட்டியளித்துள்ளார்.

      இதைதொடர்ந்து அவரது பெற்றோர் காவல்துறையில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனையடுத்து தேவராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

       தேவராஜ் பணம் கேட்டு மிரட்டியதாக அவரது அண்ணன் தெரிவித்த நிலையில், தேவராஜ் பாலியல் தொல்லை கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தனது மகளை தற்கொலை செய்ய வைத்திருக்கிறார் என்று ஸ்ரவானியின் தந்தை தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments