Breaking News

இன்று முதல் அமலுக்கு வந்த தளர்வுகள் என்னென்ன தெரியுமா..?

         தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரொனொ தொற்று காரணமாக, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, கோவில்கள், பள்ளிகள் ,கல்லூரிகள், தியேட்டர்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன.
       இந்நிலையில் பொதுமுடக்கத்தில் ஒவ்வொரு மாதமும், மத்திய அரசும் மாநில அரசும் சிறு சிறு தளர்வுகளை அளித்து வந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது.
#கோவில்கள், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து பெரிய வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி.

#தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் திறப்பதற்கு அனுமதி.

#வணிக வளாகங்கள் திறக்க அனுமதி. ஆனால் வணிக வளாகத்தில் உள்ள தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.

#வணிக வளாகத்தில் உணவு கூடங்கள், ஹோட்டல்கள் இயங்கலாம்.

#மாவட்டங்களுக்குள் சமூக இடைவெளியுடனும் கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இயங்க பேருந்துகளுக்கு அனுமதி.

#தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் இயங்கும் பூங்காக்களை 50 சதவீத பேரை அனுமதித்து இயக்கலாம்.

#இ பாஸ் முறை ரத்து செய்ய படுகிறது. ஆனால் மாநிலம் விட்டு மாநிலம் செல்வோருக்கு இ பாஸ் முறை நடைமுறையில் இருக்கிறது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments