Breaking News

பப்ஜிக்கு குட் பை கொடுத்தது மத்திய அரசு...! 118 செயலிகளுக்கு தடை.

        இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கின்றது என்ற அடிப்படையில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகள், கடந்த புதன்கிழமை அன்று முதல் இந்தியாவில் தடை செய்துள்ளது மத்திய அரசு.
           இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளால் பப்ஜி என்ற விளையாட்டு பிரபலமாகி வந்தது. இந்த விளையாட்டில் குழுவாக சென்று மற்றொரு குழுவினை தாக்கி சுட்டுக் கொல்லுதல் போன்ற வன்முறை செயல்பாடுகள் மிகுந்து காணப்பட்டது. ஆங்காங்கே குழந்தைகள் இந்த விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
   
    இவ்விளையாட்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. மேலும் குழந்தைகள் அதிக நேரம் இதில் செலவிடுவதால் இவர்களது மனநிலை பாதிக்கப்படும் என்றும் வல்லுநர்கள் குற்றம்சாட்டி வந்தார்கள். இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக வேறு வழியில்லாத குழந்தைகள் அதிக நேரம் பப்ஜி விளையாண்டு வந்தார்கள். இதனால் பல பிரச்சினைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோன்றுவதாக பல குற்றச்சாட்டுகள் மத்திய அரசிடம் வந்தவண்ணம் இருந்தன.
     இந்நிலையில் இதுதொடர்பாக கலந்தாலோசித்த மத்திய அரசு, கடந்த புதன்கிழமை அன்று பப்ஜி, பாய்டு, டென்சன்ட் வாட்ச் லிஸ்ட் உள்ளிட்ட 118 செயல்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

        மேலும் இந்திய இறையான்மை, ஒருமைப்பாடு, தேசிய உணர்வு ஆகியவை இச்செயலிலால் பாதிக்கப்படுவதாக கூறி முடிவுகளை எடுப்பதாக தெரிவித்துள்ளது.

      இது ஒரு புற  காரணமாக இருந்தாலும், சமீபகாலமாக இந்தியாவிடம் சீனா ஆட்டம் காட்டி வருகின்றது. இந்த ஆட்டத்தை ஓரளவு குறைத்துக் கொள்வதற்காகவே இந்த செயலிகளை தடைவிதித்து, சீனப் பொருளாதாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பப்ஜி செயலி, தென்கொரியாவை சார்ந்ததாக இருந்தாலும் அதன் பெரும்பான்மையான லாபம் சீனாவை சேருகிறது என்பதால் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.


Post a Comment

0 Comments