Breaking News

பிரணாப் முகர்ஜி காலமானார்..! இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு..

       முன்னாள் குடியரசு தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி(84) கடந்த சில நாட்களாக கொரொனொ பாதிப்பினால் அவதியுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
         இதைத்தொடர்ந்து மத்திய அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அவரது மறைவிற்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

       இதன்படி மூன்று கட்டங்களாக அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. முதலில் முக்கிய பிரமுகர்களும், உயரதிகாரிகளும் அஞ்சலி செலுத்துவார்கள் அதன் பின்னர் மற்ற பிரமுகர்கள் காலை பதினோரு மணி வரை அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதை தொடர்ந்து பொதுமக்கள் பகல் 12 மணி வரை அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ராணுவ மரியாதையுடன் பிரணாப் முகர்ஜியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments