Breaking News

கொரொனொவிற்கான ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நிறுத்தம்... பக்க விளைவால் திடீர் முடிவு...

        உலகமெங்கும் கொரொனொவிற்கான நல்ல எதிர்ப்பு மருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரொனொ தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தியதால் சோதனை திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
       ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராப்ஸனகா நிறுவனமும் இணைந்து கொரொனொவிற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி தடுப்பூசியை  கண்டுபிடித்தது. அதைத்தொடர்ந்து இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 

       இந்நிலையில் மூன்றாம் கட்ட சோதனையில் பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பொழுது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தடுப்பூசி செலுத்தப்படுவதால் இந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

       அந்த நபருக்கு முதுகு தண்டினை பாதிக்கக்கூடிய குறுக்குவெட்டு அலர்ஜி என்ற நோய் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. .மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் பக்கவிளைவை ஏற்பட்டதா..? இல்லை; வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா..? என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

       உலகம் முழுவதும் கொரொனொ தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்கவிளைவு ஏற்பட்டு நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

     கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளில், இதுவரை எந்த தடுப்பூசியும் மூன்றாம் கட்ட சோதனையில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த திங்கட்கிழமை, உலக சுகாதார நிறுவன செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கொரொனொவிற்கான தடுப்பூசி ஜூன் மாதத்தில் தான் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments