Breaking News

புதிய கல்வி கொள்கை குறித்து குடியரசு தலைவர் ஆளுநர்களுடன் செப்-7ஆம் தேதி ஆலோசனை

    புதிய கல்வி கொள்கை குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிங் மாநில ஆளுநர்கள் உடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

     கடந்த சில அன்பாக மத்திய அரசு, கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இருப்பதாக அறிவித்தது. மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை தங்களது தாய்மொழியையும் அதன்பின்னர் மும்மொழி கொள்கையையும் பின்பற்றும் விதத்தில் புதிய கல்விக்கொள்கை தயாராகி இருந்தது.

      புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு மாநிலங்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். மேலும் புதிய கல்விக் கொள்கையை குறித்து ஆராய, ஒரு குழு அமைத்து அந்தக் குழு கொடுக்கும் அறிக்கையை வைத்து மத்திய அரசிடம் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

   இந்நிலையில் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிங் அனைத்து மாநில ஆளுநர்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்த இருக்கிறார்.


Post a Comment

0 Comments