Breaking News

தமிழகத்தை சார்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது- ஜனாதிபதி வழங்கல்

     இந்தியா சுதந்திரத்திற்கு பின்னர் ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் புகழை பறைசாற்றும் விதமாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடெங்கும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டு வருகிறது.
       அந்தவகையில் இந்த ஆண்டிற்கு இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள்.

      ஆசிரியர் தினமான இன்று நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிங் காணொளி மூலமாக விருதினை வழங்கினார். நல்லாசிரியர் விருது பெற்ற 47 ஆசிரியர்களில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

       இதில் தமிழகத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ் திலீப் அவர்களுக்கும், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.சி சரஸ்வதி அவர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments