Breaking News

குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்...கோவையில் அதிர்ச்சி.

    கோவையில் ஒன்றரை வயது மகளை கொன்றுவிட்டு அவளது தாய் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      கோவை நெகமம் தாளக்கரை பகுதியை சார்ந்த கதிரவனுக்கு தமிழ்ச்செல்வி(26) என்ற மனைவியும் ஒன்றரை வயது ஆன யாசவி என்ற பெண் குழந்தையும் உள்ளது. கதிரவன் விவசாயம் செய்து வருகிறார். தமிழ்ச்செல்வி தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அடிக்கடி வயிற்று வலியால் அவதியுற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
        இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்ச்செல்வி உடுமலைப்பேட்டையில் இருக்கும் தன் அம்மா கனகமணி இடம் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், தன் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் போனில்தெரிவித்துள்ளார்

       இந்நிலையில் பதறிப்போன கனகமணி தனது உறவினரை அழைத்துக் கொண்டு தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்து உள்ளனர். வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டின் உள்புறம் தாழிட்டுக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய பொழுது தமிழ்ச் செல்வியும், அவளது குழந்தையும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

      உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அம்மாவும் மகளும் இறந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

Post a Comment

0 Comments