Breaking News

அரசு அதிகாரிகளுக்காக மிஷன் கர்மயோகி திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்.

           மத்திய அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்காகவும்,  புத்தாக்கம் செய்வதற்காகவும் மிஷன் கர்மயோகி திட்டத்தினை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த இருக்கின்றது.
         புதுதில்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்,  "2020- 25 ஆம் ஆண்டுக்குள் 46 லட்சம் மத்திய அரசு அதிகாரிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் ரூ 510.86 கோடி செலவில் புத்தாக்க பயிற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் மூலமாக மத்திய அரசு அதிகாரிகள் தொழில்நுட்ப பயிற்சி, புத்தாக்கம் பெறுதல் , மாறுபட்ட கோணத்தில் சிந்தித்தல்,  தொழில் திறன் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நுட்பங்களை அறிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

  மேலும் பிரதமர் மோடி தலைமையில் மனிதவள கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டு, நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சில திருத்தங்களையும், மாற்றங்களையும் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments