Breaking News

மிரட்டலான விஜய் - விஜய் சேதுபதி காட்சிகள்..! 'மாஸ்டர்' படம் குறித்து விஜய் மகிழ்ச்சி.

      டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருக்கும் 'மாஸ்டர்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி பங்குபெறும் காட்சிகள் மிரட்டலாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. காட்சிகளை பார்த்த விஜய், லோகேஷ் கனகராஜை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார். மீண்டும் ஒரு படத்தில் இணையலாம் என்றும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

       ஏப்ரல் மாதமே திரைக்கு வருவதாக இருந்த 'மாஸ்டர்' திரைப்படம், பொது முடக்கம் காரணமாக, பட வெளியீடு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 'மாஸ்டர்' திரைப்படம், எப்பொழுது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வருகின்றனர்.

     தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்', சூர்யாவின் 'சூரரைப்போற்று' உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளன . இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகுமா..? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments