Breaking News

ஐ பி எல் தொடரில் இருந்து மலிங்கா விலகல்...! மும்பை அணிக்கு பின்னடைவு.

        ஐ பி எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக பந்து வீசி, பல வெற்றிகளை தேடித் தந்தவர் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. 
      வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து வழங்குவதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் மலிங்காவின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், ஆதலால்   மலிங்கா தனது தந்தையின் அருகே இருந்து அவரை கவனித்துக் கொள்வதாகவும் அதனால் நாடு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. 
     மலிங்கா இல்லாதது நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகதானிருக்கும். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரராக இருந்து வரும் மலிங்கா, கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில்  கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க விடாமல் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியின் வெற்றியை  பறித்தவர் ஆவார். 

      ஆதலால் மலிங்கா இல்லாதது கட்டாயம் மும்பை அணிக்கு பின்னடைவாக தான் இருக்கும். தற்பொழுது  மலிங்காவிற்குப் பதிலாக ஆஸ்திரேலியா 
வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.


Post a Comment

0 Comments