Breaking News

"இரக்கமற்ற மத்திய அரசு"- நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் காட்டம்...

       பல்வேறு தரப்பினர் நீட் தேர்வினை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு செப்டம்பர் 19ம் தேதியில் நாடெங்கும் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தது.
    இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளான். அவன் நீட் தேர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

     கடந்த சில நாட்களுக்கு முன்பாக இது போலவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுபஸ்ரீ என்னும் மாணவி நீட் தேர்வினால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

       இந்நிலையில் மாணவன் விக்னேஷ் மறைவையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவன் விக்னேஷ்க்கு அஞ்சலி பதிவு ஒன்றினை ட்விட் செய்துள்ளார்.

அதில் "மாணவன் விக்னேஷ் இன் மறைவு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நாம் நீட் என்ற பலிபீடத்தில் மற்றொரு உயிரை இழந்து இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

      மேலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் பிரச்சினையை எதிர் கொள்ளுங்கள் என்றும், தற்கொலை எண்ணத்தை விட்டுவிட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

     மேலும் இரக்கமற்ற இந்த மத்திய அரசு எப்பொழுது நீட் தேர்வினை ரத்து செய்யப் போகிறது? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் முக ஸ்டாலின்.


Post a Comment

0 Comments