Breaking News

தயாரிப்பாளராக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்..!

         நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து, குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக முன்னிலை பெற்றார். மேலும் 'மகாநடி' என்ற திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.
      இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராக களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெப் சீரியஸ் சீரியஸ் ஒன்றை கீர்த்தி சுரேஷ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வெப் சீரியஸின் கதை அவருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டதாம். அதனால் அந்த வெப் சீரியஸை  தானே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம். ஆனால்  தயாரித்து அவர் நடிப்பாரா..? என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. இது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments