Breaking News

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது...!

         நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடக்க இருக்கிறது.
        செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிங்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தொடங்கி வைக்க இருக்கிறார். அதன் பின்னர் அவர் மக்களவையில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

      செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை வார விடுமுறை, பண்டிகைக்கால விடுமுறை என்று எந்த விடுமுறையும் இல்லாமல் கூட்டத்தொடர் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரொனொ தொற்று ஏற்படாத வண்ணம் இரு அவைகளிலும் தீவிரமான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments