Breaking News

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நுழைந்து தாக்குதல்..

    இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு-காஷ்மீர் பகுதி எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் இந்த வாரத்தில் மட்டுமே மூன்று முறை இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
       ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்ட மான்கோட் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் இதுவரை கையெழுத்தான ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை எட்டு முப்பது மணிக்கு கையெறி குண்டுகளை வீசியும், சிறிய ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது . இந்த தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இதேபோன்று கடந்த புதன் வியாழக்கிழமைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் இரண்டாம் தேதியில் ரஜளரி கெரி பகுதியில், பாகிஸ்தான்  ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 

      இந்தியாவைப் பொருத்தவரை இந்தியா அமைதியை விரும்பினாலும் சுற்றியுள்ள நாடுகள் அமைதியாய் இருக்க விடுவதில்லை. நேபாளம், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை சீண்டிப் பார்க்கும் நிலையில், தற்பொழுது பாகிஸ்தானும் அவர்களோடு கைகோர்த்து பிரச்சனையை இழுக்கிறது.

Post a Comment

0 Comments