Breaking News

இட்லி மாவில் பணியாரம் செய்ய தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க..!

     மாலை நேரத்தில் சுவையான டீயுடன், சூடான பணியாரத்தை உட்கொண்டால் அதைவிட வேறு எதுவும் இந்த உலகில் மகிழ்ச்சியாக தெரியாது. அந்த அளவிற்கு அற்புதமான சுவையினை நமக்கு உணர்த்தக் கூடியது.
     அந்த வகையில் இட்லி மாவினால் பணியாரம் செய்து சாப்பிடுவது எளிமையாகவும், அதே நேரத்தில் அருமையான சுவையானதாகவும் இருக்கும் . சரி..! இட்லி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையானவை
இட்லி மாவு

கடலைப்பருப்பு

உளுந்தம் பருப்பு

பச்சை மிளகாய்

கறிவேப்பிலை

செய்முறை

     ஒரு வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பினை போட்டு நன்கு வறுத்து வைத்து கொண்டு, அதனோடு மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு அக்கலவையை தயார் செய்து வைத்திருக்கும் இட்லி மாவுடன் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

       அதன் பின்னர் பணியார கடாயை அடுப்பில் வைத்து, எல்லா துளைகளிலும் , எண்ணெய் அல்லது நெய் விட்டு போதுமான அளவு மாவை ஊற்றுங்கள். 2 நிமிடம் கழித்து திருப்பி போடவும். பனியாரம் நன்கு வெந்து உப்பி இருக்கும் நிலையில் எடுத்து பரிமாறிக் கொள்ளுங்கள்.

   இதனோடு ஒரு டீ அல்லது காபியை சேர்த்து பருகினால்... அடடா..! சொர்க்கம்.

Post a Comment

0 Comments