Breaking News

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மாரடைப்பால் கணவன் மரணம்...

      கோயமுத்தூரில் பக்கவாதத்தால் இறந்த மனைவியின் துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மாரடைப்பால் கணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
       கோயமுத்தூர் சுந்தராபுரம் பகுதியை சார்ந்தவர் மணி (74). இவர் தனியார் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜினி(72) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

      சரோஜினி கடந்த ஐந்து ஆண்டுகளாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சரோஜினி உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்ட அவரது கணவர், மனைவி இறந்த  துக்கம் தாங்க முடியாமல் மாரடைப்பால் மயக்கமுற்றார்.

    உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக பரிசோதித்த டாக்டர்கள் அறிவித்தனர்.

     இந்த சம்பவத்தால் மணி -சரோஜினி தம்பதியினரின் உறவினர்கள் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

      இந்த தம்பதிகளின் உடல்கள் ஒரே நேரத்தில் நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. வாழ்விலும் சாவிலும் ஒன்றிணைந்த தம்பதியரை நினைத்து அனைவரும் கண் கலங்கி நின்றனர்.

Post a Comment

0 Comments