Breaking News

தீ விபத்து..! ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி.. சேலத்தில் நிகழ்ந்த பரிதாபம்.

       சேலம் மாவட்டம் குரங்கு சாவடி அருகே உள்ள நகரமலை பகுதியில் மரம் அறுவை மில் உரிமையாளர் அன்பழகன், தன் மனைவி புஷ்பா மற்றும் சகோதரர் கார்த்திக் அவரது மனைவி மகேஸ்வரி மகன்கள் சர்வேஷ் முகேஷ் ஆகியோரோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
      இந்நிலையில் வியாழக்கிழமை அன்று நள்ளிரவு அன்பழகன் வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீவிபத்தில் வீடு முழுவதும் எரிந்து, உறங்கிய நிலையில் இருந்த ஐந்து பேரும் கருகிய நிலையில் எரிந்து இறந்து போயினர். தீ விபத்து ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

       தகவலின்பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் உதவிக்காக தீயணைப்புத்துறையினர் இடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுமையாக எரிந்து போய் விட்டது. சம்பவத்தை ஒட்டி சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். ஒரே வீட்டில் ஐந்து பேர் பலியான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.


Post a Comment

0 Comments