Breaking News

மாரடைப்பால் பிரபல நடிகர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்..

     நடிகர் தனுஷின் "உத்தமபுத்திரன்" படத்தில் நடித்திருந்த நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று காலையில் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
       தெலுங்கு சினிமா உலகில் "பிரம்மா புத்ருடு" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, குணச்சித்திர வேடம், வில்லன், காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி (74).

      ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஜெயபிரகாஷ் ரெட்டி, தமிழில் தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் காமெடி வேடத்தில் நடித்து பலரது பாராட்டினை பெற்றார்.

     இந்நிலையில் இன்று காலையில் ஜெயபிரகாஷ் ரெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவு தெலுங்கு துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

       இதுகுறித்து ஆந்திராவின் அரசியல் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டரில், தெலுங்கு சினிமா ஒரு மாணிக்கத்தை இழந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் எனவும் பதிவிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments