Breaking News

முதலமைச்சர் பழனிசாமி இன்று மருத்துவக் குழுவுடன் ஆலோசனை..

         கொரொனொ தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஒருசில தளர்வுகளுடன் பொது முடக்கம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு செப்டம்பர் 07 முதல் முழுமையான அளவில் பேருந்து போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

       இதை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, இன்று மருத்துவ குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார். இந்த ஆலோசனையில் புதிய தளர்வுகளால் தொற்று அதிகரிக்குமா என்பதைப் பற்றியும், ஒருவேளை தொற்று அதிகரித்தால் அதனை எப்படி கையாள்வது? என்பதை பற்றியும், தேவையான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது பற்றியும் விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

       இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

      இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு சில புதிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments