Breaking News

இந்திய சீனா எல்லை பிரச்சினையில் உதவ அமெரிக்கா தயார் டிரம்ப் அறிவிப்பு

    சமீபகாலமாக இந்தியா-சீனா எல்லையில் பிரச்சனை நீடித்து வருகிறது. சீனா இதுவரை மூன்று முறை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகவும் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும்  இந்தியா-சீனா எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

      இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வீஃபெங்குடன் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் . இப்பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லை பிரச்சனையை சுமுகமாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

     இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்திய சீன எல்லை பிரச்சினையையும் மிகவும் மோசமானது எனவும், அந்த நாடுகள் விரும்பினால் அமெரிக்கா தலையிட்டு இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்க பேச்சுவார்த்தை நடத்தி தரும்" எனவும் தெரிவித்தார்.

     ஏற்கனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, இந்தியா -பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்த பொழுது அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி தருவதாக அறிவித்திருந்த பொழுதில், இந்தியா உள்நாட்டு பிரச்சினையில் மூன்றாவது நாட்டினை அனுமதிக்க முடியாது என்று பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments