Breaking News

செப் 9 ஆம் தேதியில் திமுக பொதுக்குழு கூட்டம்..! ஸ்டாலின் அறிவிப்பு.

             தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் செப்டம்பர்  9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
      திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்த அன்பழகன் மறைவையொட்டி திமுக பொதுச் செயலாளர் பதவி தற்பொழுது காலியாக இருக்கின்றது. மேலும் திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் துரைமுருகன் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

            இந்நிலையில் திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியை நிரப்பும் பொருட்டு வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment

0 Comments