Breaking News

இந்தியாவில் பெருகிவரும் கொரொனொ..! காரணம் என்ன..?

       இந்தியாவில் கடந்த நான்கு நாட்களுக்குள் 70,000 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரொனொ பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது பெருகி வரும் வேகத்தை கணிக்கும் பொழுது, இன்னும் ஆறு வாரத்திற்குள் இந்தியா முதல் இடத்தை பிடிக்கலாம் என்று இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் அகர்வால் எச்சரித்துள்ளார்.
    மேலும் அவர் ஊரடங்கு தளர்வுகள், நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும், தற்போதைய நிலையில் இறப்புகள் எண்ணிக்கையை குறைப்பது நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

     இந்தியாவில் நோய்த்தொற்று வேகமாக பரவுவதற்கு காரணங்களாக டாக்டர் சமரன் பண்டா தெரிவித்துள்ளவை

#இந்தியாவில் தற்போது கொரொனொ பரிசோதனையில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது

#ஊரடங்கு தளர்வுகள், இறப்பு விகிதம் குறைவினால் ஏற்படும் மெத்தன போக்கு 

#நோயாளிகள் மற்றும் அறிகுறி இல்லாதவர்களுடன் நெருங்கிய பழக்கம்

#முக கவசம் அணிதல், கைகளை கழுவுவது புறக்கணித்தல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதிருத்தல், ஆகியவையே இந்தியாவில் கொரொனொ வேகமாகப் பரவுவதற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments