Breaking News

"வீடு தேடி வரும் வங்கி சேவை" நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்...

நாடு முழுவதும் "வீடு தேடி வரும் வங்கி சேவை"யை நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார்.
       பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் "வீடு தேடி வரும் வங்கி சேவை " என்ற சேவையை அறிமுகப்படுத்த திட்டமொன்றை வரைந்தன. இத்திட்டத்தை பொறுத்தவரை நாடு முழுவதும் 100 மையங்களில், வங்கி சேவை ஏஜென்டுகள் மூலமாக தொலைபேசி, இணையம், செல்போன் ஆப் வழியாக இவர்களை தொடர்பு கொண்டால், வங்கி செயல்பாடுகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார்கள். இதற்கு குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்கடுக்க வங்கியில் நின்று நேரத்தை வீணடித்த நிலை மாற இச்சேவை வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      கிட்டத்தட்ட 50 சதவீத வங்கி சேவைகள் டிஜிட்டல் மூலமாக வழங்கப்பட்டு வங்கிச் செயல்பாடுகள் அனைத்தும் எளிமையாக்கபட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வயதானவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்திட்டத்தினை தொடங்கிவைத்து தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்..


Post a Comment

0 Comments