Breaking News

74 வயதில் ஆந்திர பெண்ணுக்கு இரட்டை குழந்தை..! உலக சாதனை.

       ஆந்திர மாநிலத்தில் 74 வயது பெண் ஒருவருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ உலகில் பெரும் சாதனையாக இது கருதப்படுகிறது.
       ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சார்ந்த மங்காயம்மா என்பவருக்கும், ராஜாராவ் என்பவருக்கும் கடந்த 1962-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத இவர்கள், செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறலாம் என்று கருதி தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகினர்.

    மாதவிடாய் காலம் முடிந்துவிட்ட  காரணத்தினால் டோனரிடம் இருந்து கருமுட்டைகள் பெறப்பட்டு கணவரின் உயிரணுக்கள் மூலமாக கருவுற செய்து டாக்டர்கள் குழந்தை பிறக்க செய்துள்ளனர்.

            கடந்த 2016ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த 72 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது அதிக வயதில் குழந்தை பெற்று சாதனை படைத்த இந்திய பெண்மணி என்ற சாதனையாக இருந்து வந்தது. தற்பொழுது 74 வயதில் அதுவும் இரட்டை குழந்தைகளை பெற்றிருப்பது இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் சாதனையாக இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தாயும் இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments