Breaking News

கொரோனா முகாமில் இருந்த கணவருக்கு மது வழங்கிய மனைவி...! குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட கணவன்..

     சிதம்பரத்தில் கொரொனொ தொற்றினால் பாதிக்கப்பட்ட 43 வயதான ஒரு நபரை கோல்டன் ஜூபிலி விடுதி வளாகத்தில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் உணவு வழங்க வந்த அவரது மனைவி, யாருக்கும் தெரியாமல் மதுபாட்டில் ஒன்றினை எடுத்துவந்து கணவருக்கு கொடுத்துள்ளார்.
    அதன்பின்னர் அவரது கணவர், மது குடித்துவிட்டு அங்கிருக்கும் சக நோயாளிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்ற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினரை வர வைத்தனர். இதன்பின்னர் ரகளையில் ஈடுபட்ட கணவன் மற்றும் மதுவினை வழங்கிய மனைவி ஆகியோர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments