Breaking News

நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசுக்கு கடிதம்.....!

          மத்திய அரசை செப்டம்பர் 19-ஆம் தேதி நீட் தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இம்முடிவுக்கு பல அரசியல் தலைவர்களும், மாணவர்களும், சில சினிமா பிரபலங்களும் எதிர்த்து, நீட் தேர்வினை ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
     கொரொனொ தொற்று பரவலை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் நடக்க இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

      தற்போதைய சூழல் பற்றியும், நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பு பற்றியும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு அந்த கடிதத்தில் விஜயபாஸ்கர் எழுதியுள்ளார்.
       மேலும்  விஜயபாஸ்கர்  நீட் தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு மட்டும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Post a Comment

0 Comments