Breaking News

சுவையான வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி தெரியுமா?

          வெள்ளரிக்காய் பச்சடி, உணவுடன் கலந்து சாப்பிட உதவும் அற்புதமான சுவை மிகுந்த ஒரு சைடிஷ் வகையாகும். இந்த வெள்ளரிக்காய் பச்சடியை எளிமையான முறையில் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.
தேவையான பொருள்கள்

நறுக்கிய வெள்ளரிக்காய்

துருவிய தேங்காய்

சீரகம் 

தயிர்
கடுகு 

கறிவேப்பிலை 

பெருங்காயம்

பச்சை மிளகாய்

செய்முறை

     தயிருடன் துருவிய தேங்காய், பெருங்காயம்,மிளகாய், சீரகம் ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கும் நிலையில் மேலே அரைத்து வைத்துக் கொண்டவற்றை வானலியில் போட்டு கிளறவும் . அதன் பின்னர் நறுக்கிய வெள்ளரித் துண்டுகளை போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறிக் கொண்டால் சுவையான வெள்ளரிக்காய் பச்சடி தயார்.


Post a Comment

0 Comments