Breaking News

வைரல் வீடியோ-டிராக்டர் மூலம் பால் கறந்த விவசாயி...! மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பாராட்டு...





        மகாராஷ்டிராவை சார்ந்த விவசாயி ஒருவர், டிராக்டரின் புகைப்போக்கி குழாய் அருகே இருக்கும் காற்று உறிஞ்சும் பைப்பை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பால் உறிஞ்சி பைப்புகளை இணைத்து டிராக்டரை ஆன் செய்து 2 முதல் 3 நிமிடங்களில் பசுவிலிருந்து எளிதாக பாலை உறிஞ்சுகின்றார்.



     டிராக்டர் மூலம் பால் கறக்கும் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து வியந்துபோன மஹிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டிராக்டர் பலவிதங்களில் பயன்பட்டு வருகின்றது. ஆனால் பால் கறக்கும் இயந்திரமாக பயன்படும் என்பதை கண்டு வியப்பாக இருக்கின்றது என்றும் அந்த விவசாயினை மனமார பாராட்டியுள்ளார் .

Post a Comment

0 Comments