Breaking News

பல்வலி பிரச்சனையா..! இனி கவலை வேண்டாம்; உடனடியாக குணமாக்கும் வழிமுறைகள்....

     இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதாலோ, நோய் தொற்று காரணமாகவோ , முறையான பராமரிப்பு இல்லாததாலோ சில பேருக்கு அடிக்கடி பல் வலி ஏற்படுவதுண்டு. மற்றவர்களைவிட பல்வலி தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்து வருகின்றது.
        பல் வலிக்கு பல ஆங்கில மருத்துவ முறைகள் இருந்தாலும் கிராமத்தில் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் சில உடனடி நிவாரணத்தை வழங்குகிறது.

அந்த வழிமுறைகளில் சிலவற்றை காண்போம்.

#வெங்காயத்தை பச்சையாக மென்று சாறினை குடித்தால் வெங்காயத்தின் உட்பொருட்கள் பல்வலி நீங்க துணைபுரிகின்றது.

#கொய்யா மரத்தின் இலைகள் இரண்டை பறித்து வாயில் போட்டு மென்று வர சில நிமிடங்களில் பல் வலி நின்றுவிடும்.

 வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து வாய் கொப்பளிக்க பல் வலி குறையும்.

#இஞ்சி சாற்றை சூடுபடுத்தி கொப்பளித்து வர பல்வலி குறையும்.

#பல் வலி இருக்கும் இடத்தில் கிராம்பு துண்டுகளை சிறிது நேரம் வைத்து எடுத்தால் பல்வலி குணமாகும்.

#வெள்ளரிக்காயை சிறிதாக நறுக்கி பல் வலி இருக்கும் இடத்தில் ஒதுக்கிவைத்து இருந்தால் பல் வலி குறைந்துவிடும்.

Post a Comment

0 Comments