Breaking News

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

       தமிழகத்திலேயே வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த ஓரிரு நாட்களுக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
     மேலும் கடற்கரையோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த வெப்பச்சலனம் காரணமாக வெப்பநிலையின் அளவு குறைந்து காணப்படும் என்றும் கடல் அலையின் உயரம் இரண்டு முதல் மூன்று அடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

     தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments