Breaking News

அம்மாவை சுடுகாட்டில் புதைத்த மகன்கள்...! குடிக்க பணம் கிடைக்காத மகன்களின் வெறிச்செயல்,,

         ஈரோடு மாவட்டத்தில் குடிக்க பணம் கிடைக்காததால் பெற்ற தாயினை உயிரோடு சுடுகாட்டில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


    ஈரோடு மாவட்டம் வ.உ.சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சரோஜா. இவருக்கு விக்னேஷ் ,அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் . இவர்கள் இருவருமே பெரும் குடிகாரர்கள்.


        சம்பவத்தன்று இரவில் தூங்கிக்கொண்டிருந்த சரோஜாவினை எழுப்பி குடிக்க பணம் கேட்டு இருக்கின்றனர். ஆனால் வைத்திருந்த பணத்தில் காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கிவிட்டதாக சரோஜா கூற அருகில் இருந்த இரும்பு கம்பியை வைத்து சரோஜாவின் மண்டையில் அடித்து காயப்படுத்தினர்.
     பதறிப்போன இரண்டு மகன்களும் வெளியில் யாருக்கும் தெரியாத வண்ணம் ஆம்புலன்சினை அழைத்து அம்மாவுக்கு திடீரென உடம்பு சரியில்லை; மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி எடுத்துச் சென்றுள்ளனர்.
       ஆஸ்பத்திரிக்கு சென்ற சரோஜா திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு மகன்களிடம் விசாரணை நடத்தியபோது இரும்புக் கம்பியை வைத்து அடித்த பொழுது அம்மாவின் உயிர் பிரிந்து விட்டதாகவும் உடனே சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.


      அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.

        குடிப்பதற்காக பெற்றதாய்தனை மகன்களே கொன்று புதைத்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments