Breaking News

இனி ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பொருள் வாங்க முடியும்..! தமிழக ரேஷன் கடைகளில் அறிமுகமாகும் பயோ மெட்ரிக் முறை..

      தமிழகத்தில் தற்பொழுது ஸ்மார்ட் கார்டு மூலமாக ரேஷன் கடைகளில் பொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நிலையில் ஊழல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை அறிமுகம் செய்யலாமா..? என்று அரசு பரிசீலித்து வந்தது.
    இதைத்தொடர்ந்து திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

     பரிசோதனை வெற்றி பெற்ற நிலையில் பயோமெட்ரிக் முறை தமிழகமெங்கும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அமலுக்கு வர இருக்கிறது. இந்த பயோ மெட்ரிக் முறையில்,  இனி ரேஷன் கார்டுகளில் பெயர்  உள்ளவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.
     பக்கத்து வீட்டில் உள்ளவர்களோ அல்லது உறவினர்களோ சென்று மற்றவர்களுக்கு பொருள் வாங்கும் நிலை இனி இருக்காது என்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்பது ஒரு சிலரது கருத்தாக இருக்கின்றது.

      தற்போது கொரொனா தொற்று நடைமுறையில் இருப்பதால், பயோமெட்ரிக் முறையை சில மாதங்கள் கழித்து நடைமுறைப்படுத்தலாமே..! என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.


Post a Comment

0 Comments