Breaking News

செப்டம்பர் மாதத்திற்கான தளர்வுகள் என்ன..? ஆலோசனையில் தமிழக முதல்வர்...

      தமிழகத்தில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, அடுத்தடுத்து ஒவ்வொரு மாதங்களிலும் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
        இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் முடிவடையும் நிலையில், வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் எந்தெந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை தொடக்கம் உட்பட பல செயல் முறைகள் நடைமுறைக்கு வருமா என்ற எண்ணம் பொது மக்களிடையே இருந்து வருகிறது.
     
        வருகின்ற செப்டம்பர் மாதத்திற்கான தளர்வுகள்  குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், இன்று காலையில் மாவட்ட ஆட்சியர்களுடனும், மாலையில் மருத்துவ நிபுணர்களுடனும் காணொளி மூலமாக ஆலோசனையை நிகழ்த்த இருக்கிறார்.

     இந்த கூட்டத்தின் முடிவில் சட்டம் ஒரு மாதத்திற்கான தளர்வுகள் என்னென்னவென்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments