Breaking News

1-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் விரைவில் பாடங்கள் தொடங்கப்படும்...! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு...

      தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி உருவாக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் கொண்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு பட்டு வருகின்றது.
      இந்நிலையில் இந்த ஆண்டு கொரொனொ தொற்று காரணமாக பள்ளிகள் இதுவரை திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலமாக கற்றல் கற்பித்தல் செயல்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

        இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்ததும் கல்வி தொலைக்காட்சி மூலமாக 2 வகுப்புகளுக்கும் விரைவில் பாடத்திட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments