Breaking News

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி..! தமிழக அரசு அறிவிப்பு...

       தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. தற்போது அரசு கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக தளர்த்தி வருகின்றது.

         அந்தவகையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அரசு சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் பத்தாம் தேதி முதல் மாநகராட்சியில், அதிகபட்சம் ஆண்டு வருமானம் 10 ஆயிரத்திற்கு குறைவாக இருக்கக்கூடிய கோயில், தேவாலயங்கள், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களை , மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று திறந்து கொள்ளலாம்; என்று அரசு அறிவித்துள்ளது. இதனுடன் வாகன பயிற்சி மையங்களையும் திறந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments