Breaking News

இனி உடனடி இ பாஸ் தமிழக அரசு அதிரடி

    கடந்த மார்ச் மாதம் முதல் நாடெங்கும் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இ பாஸ்

    ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கு செல்வதற்கும் உரிய காரணங்களைக் காட்டி ஆவணம் பெற்று செல்வதே இந்த இ பாஸ் நடைமுறையாகும். இந்த  இ பாஸ்சை காட்டி நாம் எங்கு வேண்டுமென்றாலும் சென்று வரலாம் என்று இருந்தது.

இ பாஸ் குளறுபடி

        ஆனால் இந்த இ பாஸ் வழங்குவதில் பல முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இ பாஸ்சை நீக்கி விடலாம் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி அவர்கள் இ பாஸ்சை  நீக்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால் அது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இரண்டு குழு

     இ பாஸ் வழங்க மாவட்டத்திற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க மேலும் ஒரு குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக இனி இ பாஸ் உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments