Breaking News

அரசுப்பள்ளிகளில் அதிகரித்த பிளஸ் 1 மாணவர் சேர்க்கை...!

     தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. அதை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகள் கடந்த ஆண்டில் நல்ல தேர்ச்சி சதவீதம் பெற்றிருப்பதால்  சேர்க்கை சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். 
       ஆனால் சில பெற்றோர்கள், பொது முடக்கம் காரணமாக தொழில் சரியான லாபம் அளிக்காததாலும், வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாலும், தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

      நடைமுறை ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட்டால், அதிகப்படியான மாணவர்களை அரசு பள்ளிகள் பெற்று வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


Post a Comment

0 Comments