Breaking News

கொரொனா தொற்று - திருமாவளவன் அக்கா பானுமதி மரணம்

          தமிழகத்தில் கொரொனா தொற்றுவினால் இதுவரை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
        அதிலும் கடந்த 10 நாட்களாக தலைவர்கள் பலபேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதைத்தொடர்ந்து திருமாவளவனின் மூத்த அக்கா பானுமதி அவர்கள் கொரொனா தொற்றுவினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

           இந்நிலையில் பானுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அரசு விதிமுறைப்படி சுகாதார ஊழியர்கள் அடக்கம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவரது மறைவிற்கு பல தலைவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments